மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தார் புதிய சீன தூதுவர்!

0
41
dailymirror

இலங்காவுக்கான புதிய சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாசியாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று (9) கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து நட்புரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து பதவியேற்றுக்கொண்ட வேய் ஹுவாசியாங்குக்கு, இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பொறுப்பேற்றமைக்காக மஹிந்த ராஜபக்‌ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here