முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ‘பிரதீப் மாஸ்டர்’ என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, ‘கஜன் மாமா’ எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை (08) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.