அடிக்கடி மின்சாரம் தடைப்படுதவதனால் ஹட்டன் மக்கள் பாதிப்பு
ஹட்டனில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் நகரில் பகல் வேளைகளில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வரும் நிலை நீடிக்கின்றது.
இதனால் அனைத்து துறையினருக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சில நேரங்களில் ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலம் மின்சாரம் தடைப்படுவதுடன், அடிக்கடி அடிக்கடி மின்சாரம் தடைப்படும் நிலை நீடித்து வருகின்றது.
குறிப்பாக கிழமை நாட்களில் அதிகளவில் இவ்வாறான நிலைமை நீடித்து வருகின்றது.
நோர்ட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்மின்விநியோகத் திட்டத்தின் பராமரிப்பு பணிகளினால் இவ்வாறு மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.