பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதில் 05ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 10பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .


இந்த சம்பவம் 09.04.2018.திங்கள் கிழமை காலை 09மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
குளவி கொட்டுக்கு இலக்கான 10 பெண்தொழிலாளர்கள் என பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஏ.எஸ்.கே.ஜயசூரிய குறிப்பிட்டார்
தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலை தேயிலை மலையின் அடிபகுதில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இந்த பெண் தொழிலாளர்கலை தாக்கியதாக பாதிக்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர் .
குளவி கொட்டுக்கு இலக்கான 10பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்கள் குறித்த கவலையடை தேவையில்லையென வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்.



