இ.தொ.கா.வின் நோர்வூட்பிரதேசசபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜா ஐ.தே.க.யின் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பா.சிவநேசனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு.
நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜாவின் வீட்டிற்கு பலத்த பொலிஸ்பாதுகாப்பு
இலங்கை தொழிலாளர் காங்ரசின் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜாவை தொழிலாளர் தேசிய கங்கத்தின் இளைஞர் அணியின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பா.சிவநேசன் மாடசாமி சரோஜாவை தாகாத வார்த்தையில் பேசியதாக கூறி மாடசாமி சரோஜாவால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் 07.07.2018.சனிகிழமை மாலை முறைபாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ லெச்சுமி மத்திய பிரிவு தோட்டத்தில் தொழிலாளர் தேசியசங்கத்தின் நிகழ்வு ஒன்று இடம்பெற்றபோது குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பா.சிவநேசன் இலங்கை தொழிலாளர் காங்ரசை கடுமையாக விமர்சித்ததாகவும் விமர்சித்த சிவநேசனை நிகழ்வு நிறைவுபெற்ற உடன் பா. சிவநேசனை சந்தித்து ஏன் இப்படி இ.தொ.கா ஒன்றுமே மக்களுக்கு செய்யவில்லையென விமர்சிக்கிறீர்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் பொகவந்தலாவ லெச்சுமி மத்தியபிரிவு தோட்ட ஆலயத்திற்கென ஒதுக்கபட்ட 03இலட்ச்சம் ரூபா நிதி எங்கே அந்த நிதிக்கு என்ன நடந்தது என கேட்டபோதே குறித்த பிரதேசசபை உறுப்பினர் மாடசாமி சரோஜாவை தகாதவார்த்தையால் பா.சிவநேசன் பேசியதாக பொலிஸ் நிலையத்தில் பதியபட்டுள்ள முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேலை பொகவந்தலாவ பொலிஸ்நிலையத்தில் முறைபாட்டை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பிய நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜாவின் வீட்டின் முன் தொழிலாளர் தேசியசங்கத்தின் ஆதரவாளர்கள் சில கூச்சலிட்டு தனது வீட்டுக்கு கற்களை கொண்டு எரிந்தமை குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்கபட்டுள்ள தாகவும் தெரிவிக்கபடுகிறது.
இந்த குற்றச்சாற்று குறித்து தொழிலாளர் தேசியசங்கத்தின் இளைஞர் அணியின் தலைவரும் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினருமான பா.சிவநேசனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது இந்த குற்றச்சாற்றை மறுத்துள்ளார். பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மத்தியபிரிவில் நிகழ்விற்கு நான் சென்றது உண்மை ஆனால் என் மீது குற்றம் சுமத்தியுள்ள இலங்கை தொழிலாளர் காங்ரசின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரை நான் சந்திக்கவில்லை அவர் என்னுடன் கலந்துரையாடவில்லையெனவும் இது ஒரு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மீது சேறுபூச முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)