அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையின்படி பொருட்களை விநியோகம் செய்ய வேண்டுமாக இருந்தால், சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது சந்தையில் விற்பனையிலுள்ள அத்தியாவசிப் பொருளான சீனி ஒரு கிலோவுக்கு 115 ரூபா செலவாகின்றது. இதில் 30 ரூபா அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான வரியை நீக்கினால், சீனியை 85 ரூபா செலவு செய்து கொண்டுவந்து 95 ரூபாவுக்கு சில்லறை விலைக்கு விற்னை செய்ய முடியும் எனவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எதுஎவ்வாறாயினும், குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படாதவிடத்து 1977 எனும் தொலைபேசி இல ஊடாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.