கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்பின் பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நாளை (23) முதல் 2,200 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.