சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறுவது நாட்டில் மீண்டும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சில வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே ரணில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்களும், கொள்கைப் பிரகடனத்தில் உள்ள உண்மைகளும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்