2022 ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 கோடி ரூபாவிற்கு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் வாங்கியது.2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணிகள் இன்று அறிவித்தன.
இதன்படி, சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்கவை தமது அணியில் இருந்து நீக்குவதற்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 கோடி ரூபாவிற்கு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் வாங்கியது.இதன்படி வனிந்து ஹசரங்க குறித்த ஆண்டில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக பதிவு செய்யப்பட்டார்.
இதேநேரம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து பானுக ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளார்.