LLC மாஸ்டர்ஸ் என்ற லெஜண்ட் லீக் கிரிக்கட், முன்னாள் கிரிக்கட் வீரர்களின் தொடர் டோஹா கட்டாரில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் இந்தியன் மஹாராஜாஸ், ஆசியன் லயன்ஸ் மற்றும் வோர்ல்ட் ஜயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றுகின்றன.
இதில் இலங்கையைச் சேர்ந்த வீரர்களான திலகரத்ன டில்சான், உபுல் தரங்க, திஸ்ஸர பெரேரா, தில்ஹார பெர்ணாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இந்த தொடருக்கான கால அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.