அதிவேகமாக மோதி கார் விபத்துக்குள்ளானதில் 7 பேருக்கு காயம்!

0
17
www.ctvnews.ca

கனடா, லண்டன் ஒன்டாரியோவில் (London, Ont.) உள்ள ஷெர்வுட் பாரஸ்ட் மால் (Sherwood Forest Mall) வணிக வளாகத்தில் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜூன் 12 வெள்ளிக்கிழமை காலை 7:40 மணியளவில், குட்லைப் பிட்னஸ் (GoodLife Fitness) மையத்தின் வெளிப்புறச் சுவரை உடைத்துக் கொண்டு ஜீப் ரேங்லர் (Jeep Wrangler) ரக வாகனம் ஒன்று உள்ளே புகுந்தது.

விபத்து நடந்த நேரத்தில் சுமார் 30 பெண்கள் புதிய உடற்பயிற்சி வகுப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

கட்டிடம் வெடித்து சிதறியது போன்ற சத்தத்துடன் கண்ணாடி மற்றும் செங்கற்கள் பறந்து விழுந்ததாக நேரில் பார்த்த பெர்னிஸ் பிஷப் (Bernice Bishop) தெரிவித்தார்.

இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

ஒரு பெண் காரின் அடியில் சிக்கியதாகத் கூறப்படும் நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவும், மற்றொருவர் தீவிர நிலையிலும், 5 பேர் சாதாரண நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வாகனம் அதிவேகமாக கட்டிடத்தை நோக்கி முடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக லண்டன் போலீஸ் சீப் தாய் ட்ரூவாங் (London Police Chief Thai Truong) தெரிவித்துள்ளார்.

லண்டன் பொலிஸாரின் முக்கிய குற்றப்பிரிவு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவினர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here