அத்தியாவசியப் பொருட்கள் 04 இன் விலைகள் குறைப்பு – இன்று முதல் நடைமுறை

0
127

நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, உள்ளூர் சம்பா அரிசி 5 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக உள்ளது.அதேவேளை, உள்ளூர் வெள்ளை அரிசி 16 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 189 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், உள்ளூர் நாடு அரசி 02 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் கோதுமை மா 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும்.

ஏற்கனவே பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பொருட்களின் விலைகள் இன்று குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here