அரச பேரூந்து வேண்டும் மறே வளதலை மக்கள் கோரிக்கை.

0
192

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே வளதலை தோட்டத்தில் அரச பேரூந்து சேவையை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்ற போது ஆரம்பத்தில் ஊர் பாதை மண்பாதையாக காணப்பட்டது.இதனால் மஸ்கெலியா நகருக்கு சென்று வருபவர்கள் பாதை மோஷம் என்ன்பதால் பஸ் டிக்கட்டுக்கோ மேலதிகமாக பணத்தை வழங்கினர்.

மஸ்கெலியாவில் இருந்து நல்ல தண்ணீர் வரை அரச பேரூந்து சேவையில் ஈடுபடும்.அதில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் ஊருக்கு செல்லும் வழி குன்றும் குழியுமாக காணப்பட்டதால் சிறு தனியார் பஸ்களே சேவையில் இருந்துள்ளன.

ஆனால் 2 வருடங்களுக்கு முன் குறித்த வீதி காபட் காபட் செய்யப்பட்டாலும் பேரூந்து கட்டணம் அதிகமாகவே அறவிடப்பட்டது.இப்போது டீசல் விலையை 60 ரூபாய் கூட்டினால் இவர்கள் அதே அளவு பயணிகள் கட்டணத்தையும் கூட்டி விடுகிறார்கள்.டிக்கெட் வழங்குவதையும் நிறுத்தி விட்டார்கள்.

அதுமட்டுமல்லாது அரச பேருந்து சேவை போடுவதையும் தடுத்து விடுகின்றார்கள்.இப்போது மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணீர்க்கு 145 ரூபாய் ஆனால் நல்லதண்ணீரில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தூரம் உள்ள எங்கள் ஊருக்கு 250 ரூபாய் எடுப்பதாகவும் ஒரு சில பேருந்துகளில் 300 ரூபா அறவிடுவதாகவும் குற்றம் சாற்றுகின்றனர்.

ஏறத்தாழ ஐயாயிரம் மக்கள் வாழும் இப்பகுதியில் இருந்து ஆரம்பகல்வியை பூர்த்தி செய்து மஸ்கெலியா மற்றும் ஹட்டன் நகர பாடசாலைக்கேசெல்ல வேண்டிய நிலையில் மாணவர்கள் காணப்படுகின்றார்கள்.இவ் பேருந்து கட்டண பிரச்சனையால் பல மாணவர்கள் தற்போது இடைவிலகியதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா நகரிலிருந்து வெறும் 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் மறே வளதலை ஊருக்கு 300 ரூபாய் அறவிடுவது பெரும் பாதிப்பாய் அமைந்துள்ளது.அதுமட்டுமல்லாது ஆரம்பத்தில் பஸ் கட்டணத்திற்கு அதிகமாகவே பணம் கொடுத்தோம்.ஆனால் தற்போது பாதையும் காபட் இடப்பட்டுள்ளது.அதே வேளை தற்போது இருக்கும் சூழ்நிலையில் பேருந்து கட்டணம் என பணம் அதிகமாக அபக்கொள்ளையிடுகின்றனர்.எனவே இப்பகுதிக்கு அரச பேருந்து சேவையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு மஸ்கெலியா மறே வளதலை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here