முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டு எதிரணி சார்பில் 1,000 பேரணிகள், சத்தியாக்கிரகங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இலங்கையில் அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“பல்வேறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து ஒன்றுபட்ட போராட்டத்திற்கான அழைப்புகளை நாம் கோரியுள்ளோம். இன்றைய மாநாடு அந்த கூட்டு முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது,” என்று விக்கிரமசிங்க கூறினார்.
“1,000 கூட்டு பேரணிகளை ஏற்பாடு செய்வோம். சத்தியாக்கிரகங்களையும் நடத்துவோம். உங்களில் சிலர் பாத யாத்திரைகளை வழிநடத்துவதில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே இந்த அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மாநாட்டில் கூட்டத்தில் உரையாற்றிய விக்ரமசிங்க, தனது சமீபத்திய கைது குறித்தும் பேசினார், ‘நான் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தேன். எனினும் அரச நிதியில் தனிப்பட்ட பயணம் என தெரிவித்து கைது செய்யப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தான் நாட்டுக்காக பாடுபட்ட போதிலும் அதில் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.




