இலங்கையில் கல்வித்துறையில் கொண்டுவரப்படும் மாற்றம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

0
186

இலங்கையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.குறித்த முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி, தவலம வித்யாராஜா தேசிய பாடசாலையில் புதிய தொழிநுட்ப பீட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும், இதனுடன் ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here