ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் தூர நோக்கு செயத்திட்டத்தின் கீழ் கிராமிய பொருளாதாரத்தினை உயர்த்தும் நோக்கிலும் வறுமை நிலைமையினை போக்கும் நோக்கிலும் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் நோர்வூட் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் பசும் பாலில் உற்பத்தியில் யோகட், ஐஸ் கிறீம், கிரிடொப்பி உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய சௌபாக்கியா பால் உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தலையமையில் இன்று (06) நாட்டி வைக்கப்பட்டன.
இதன் போது பசும் பால் உற்பத்தியாளர்களை ஊக்கிவிப்பதற்கு முகமாக பசு மாடுகளை கொள்வனவு செய்வதற்காக 50 பசு மாடுகள் வளர்பாளர்களுக்கு 50000 ரூபா படி காசோலைகளும் வழங்கப்பட்டன. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.
இது குறித்து நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி இங்கு கருத்து தெரிவிக்கையில்……
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களும் வந்த பின்பு தான் தோட்டப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அதுவும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இந்த அரசாங்கத்தின் மூலம் தான் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காபட் பாதைகள், பாலங்கள், மைதானங்கள், கட்டடங்கள் கிராம அபிவிருத்தி திட்டங்கள் என பல திட்டங்கள் கோடிக்கணக்கான செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் கூட ஒரு கோடி ரூபா செலவில் எமது மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது இதற்கான ஒரு தொகை நிதியினை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.
எமது நாட்டை பொருத்த வரையில் கொவிட் தொற்று காரணமாக அபிவிருத்திகள் தாமதித்தாலும் அவை நிறுத்தப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இன்றும் கூட பல அபிவிருத்தி திட்டங்களுக்கு காசு ஒதுக்கப்பட்டுள்ளது இன்று நிலவும் பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரிகள் செல்ல முடியாத நிலை காரணமாகவே அவை தொடங்கப்படாமல் உள்ளன.
எதிர்காலத்தில் நிலைமை சரிவரும் பட்சத்தில் சகல அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிப்போம், இன்று நீங்கள் இந்த மாடு வளர்ப்பதற்காக பெற்றுக்கொண்ட காசினை உரிய முறையில் பயன்படுத்தி அதில் முழுமையான பயனை அடைய வேண்டும் அரசாங்கத்தின் ஒரே நோக்கம் வறுமை நிலையில் உள்ள மக்களின் பொருளாதார நெருக்கடிகளை போக்கி அவர்களின் வாழ்தாரத்தினை உயர்த்த வேண்டும் என்று ஆகவே சலரும் சகல திட்டங்களிலும் கூடிய பயனை பெற்று தமது வாழ்வாதாரத்தினை உயர்த்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதேச சித்தார, மாவட்ட செயலகத்தின் உதவி பணிப்பாளர் சுஜீவா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ராஜன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கே.சுந்தலிங்கம்



