கைது செய்தால் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! மைத்திரி அதிரடி

0
191

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தம்மை கைது செய்யும் நோக்கில் பலர் பேசி வருவதாக முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.எனினும், உரிய நேரத்தில் தாக்குதல் பற்றிய தகவல்களை தாம் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பல்மடுல்ல பகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை தம் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தனது ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆணைக்குழுக்கள் நிறுவியதாகவும் அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஆணைக்குழு பற்றி மட்டுமே பேசப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பற்றி யாரும் பேசுவதில்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here