சிக்கல்கள் தீர்வுக்கு கொண்டுவரப்படும் வரையில் கட்சியுடன் எந்தவோர் கூட்டணியும் அமைக்கப்படாது- சஜித் அதிரடி அறிவிப்பு

0
166

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியவர்கள் ரிஷாட் பதியுதீனின் கட்சிக்குள் இருக்கும் வரையிலும். தற்போது முகங்கொடுக்கும் பல்வேறான சிக்கல்கள் தீர்வுக்கு கொண்டுவரப்படும் வரையிலும் அந்த கட்சியுடன் எந்தவோர் கூட்டணியும் அமைக்கப்படாது. என எதிரக்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியுடன், கடந்த பொதுத் தேர்தலில், கூட்டணி அமைத்து களமிறங்கினோம். என்றாலும், தற்போது புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படுகின்றது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ரிஷாட் பதியுதீனின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சஜித் பிரேமதாஸவும் இன்று (28) சென்றிருந்தார். இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here