டிக்டொக் செயலி சிறுவர் கணக்குகளில் ஆபாச உள்ளடக்கங்களை வெளியிடுவதாக தெரிவிப்பு

0
23

டிக்டொக் செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கி திசை திருப்புவதாக பிரித்தானியாவை சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற லாப நோக்கமற்ற கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இணையதளங்களில் வயது சரிபார்ப்பை கடுமையாக்க வேண்டும் என்று அழுத்தம் தொழிநுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக குளோபல் விட்னஸ் நிறுவனம் ஏற்கனவே தேடல் வரலாறு நீக்கப்பட்ட புதிய தொலைபேசிகளில் 13 வயதுடையவர்களை போல ஏழு புதிய கணக்குகளை உருவாக்கியது. டிக்டாக் கணக்கை ஆரம்பிக்க குறைந்தபட்ச வயது பதிமூன்று ஆகும்.

கணக்கை தொடங்கிய சில க்ளிக்குகளில் அனைத்து கணக்கிலும் ஆபாச உள்ளடக்கத்தை டிக்டொக் மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததாக அந்த நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு தேடல் அம்சத்தில் மேம்படுத்தல்களை மேற்கொள்ளவுள்ளதாக டிக்டொக் நிறுவன செய்தி பிரிவாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here