டிட்வா சூறாவளி காரணமாக பெற்றோரை இழந்த 103 குழந்தைகள்!

0
37

டிட்வா சூறாவளி காரணமாக பெற்றோரை இழந்த 103 குழந்தைகள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கவும் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.

பெற்றோர் இல்லாத குழந்தைகளை ஏற்றுக்கொள்ள பலர் தயாராக இருக்கின்றனர்

அதன்படி, அந்தக் குழந்தைகள் தொடர்பான முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here