அர்ஜுனின் “சீதா பயணம்” டிரெய்லர் வெளியானது!

0
107

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் 1992-ல் வெளியான ‘சேவகன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ‘ஜெய் ஹிந்த்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘வேதம்’, ‘ஏழுமலை’ என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here