தீபாவளி முற்பணம் 8 ஆயிரம்; அதிலும் கடனை கழித்து வெறும் 6 ஆயிரமாம்? தொழிலாளர் விசனம்!

0
163

தீபாவளி பண்டிகையை முன்னிட்ட ஒவ்வொரு வருடமும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 10 ஆயிரம் ருபா வழங்கபட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த மலையக அரசியல் தலைவர்கள் இம் முறை மாத்திரம் ஏன் மலையக அரசியல் தலைவர்கள் மௌனிகளா இருக்கிறார்கள் என மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கேள்வி ஏழுப்புகின்றனர்.

இந்த வருடம் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 8 ஆயிரம் ருபா மாத்திரம் வழங்கபட்டுள்ள தாகவும் இந்த தொகை போதாது எனவும் மலையக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வருடங்களில் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே எமது மலையக அரசியல் தலைமைகள் ஊடகங்களில் ஊடாக தீபாவளி பண்டிகை 10 ஆயிரம் ருபா தொடக்கம் 15 ஆயிரம் ருபா வரை வழங்கபட வேண்டுமென அறிக்கைவிட்டு வந்தார்கள் ஆனால் இம்முறை மலையக மக்கள் குறித்து எவரும் கண்டு கொள்ள வில்லையெனவும் இவர்கள் கவலை வெளியிடுக்கின்றனர்.

எனவே இம் முறை வழங்கபட்டுள்ள தீபாவளி பண்டிகைக்கான 8 ஆயிரம் ருபா முற்பணத்தில் 2 ஆயிரம் ருபா கடன் தொகையினையும் கழித்து கொண்டு வெறுமனே 6 ஆயிரம் ருபாவினை மாத்திரம் வழங்கியிருப்பதாக தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலமாக இருந்திருந்தால் தோட்ட தொழிலாளர்களின் தீபாவளி பண்டிகைக்கான முற்பணத்தினை அதிகமான தொகையுடன் மலையக அரசியல் தலைவர்கள் பேரருட் கொடுத்திருப்பார்கள்.
எனவே தீபாவளி பண்டிகைக்கு எஞ்சியுள்ள ஒரு வாரத்தினுள் தீபாவளி பண்டிகைக்கான முற்பணத்தை கடந்த வருடம் போல் இந்த வருடமும் வழங்கபட வேண்டுமென மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here