பதவி விலக வேண்டியவர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பர்- உதய கம்பன்பில எச்சரிக்கை

0
136

பதவி விலக வேண்டியவர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கான பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில முழுமையாக ஏற்று பதவி விலக வேண்டுமென பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

“ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு கூட்டத்திலேயே எரிப்பொருள் அதிகரிப்பிற்கான முடிவு எட்டப்பட்டது.

இதற்கு நியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் எழுத்து மூலமான அனுமதியை வழங்கியிருந்தார்.

இந்த அடிப்படையிலேயே எரிப்பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன.
ஆகவே என்னை பதவியில் இருந்து விலகச் சொல்ல இதற்கு மேலும் காரணங்கள் இருந்தால் அதனை பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் முன்வைக்கலாம். இதனை ஒரு சவாலாக முன்வைக்கின்றேன்’”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here