பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீபரவல் காரணமாக 04 வீடுகள் முற்றிலும் தீயினால் சேதடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வீடுகளில் வசித்தவர்களின் உடமைகள் சேதமாக்கப்பட்டிருந்தாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல் காரணமாக 30 பேர் தற்காலிக தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் மதிப்பிடப்படவில்லை என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.