மரம் முறிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிப்பு!

0
150

மலையக ரயில் பாதையில் பலான மற்றும் கடுகண்ணாவ இடையே இன்று (16) காலை பெரிய மரம் முறிந்து விழுந்ததால், கொழும்பு கோட்டை -பதுளை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று (16) அதிகாலை 5.55 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு பயணத்தைத் தொடங்கிய பொடி மெனிகே ரயில், பலான ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் ரயில்கள் பதுளை ரயில் நிலையத்திலிருந்து சரியான நேரத்தில் பயணத்தைத் தொடங்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here