இப்போது மலையகத்தில் நடப்பதென்ன? அந்த மூத்த கட்சியின் அந்த முக்கிய முக்கியமானவர் கட்சி தொடர்பில் எந்த முன்னேற்ற பாதை நோக்கியும் அக்கறை கொள்வதே கிடையாதாம் மக்கள் எப்போதும் எம் பக்கம் என்ற செருக்கோடு முடிந்தால் தனித்து வா” என்ற முழக்கத்தோடு கோயிலும் குடும்பமுமாக தன் வேலையை மட்டும் பார்த்துவிட்டு முடங்கி கிடக்கிறாராம், இதற்கு எதிர்மாறாக அந்த முகட்டின் அமைச்சர் எந்த கூட்டத்துக்கு போனாலும் தான் செய்வதை மறந்துவிட்டு அந்த மூத்த கட்சியை தாக்குவதே தனது கடமை என்ற வகையில் மேடைக்கு மேடை விளாசித்தள்ளுவதையே தனது வேலையாக கொண்டிருக்கிறாராம், ஐயா அவர்கள் அந்த பதவியில் இருந்து போய் நீண்டகாலமாகிவிட்டது நீங்க சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுவதால் எந்த நன்மையும் கிடைக்காது நீங்கள் என்ன செய்யப்போறீங்களோ அதை மட்டும் சொல்லலுங்க” என்ற வகையில் மக்கள் முணுமுணுப்பதை பார்க்க முடிகிறதாம்? மற்றவர்களை தாக்கி தாக்கி அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது ஐயா” மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்க மாற்றத்தை மக்கள் தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது பராபரமே.