மலையகப் பகுதியில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி நுகர்வோர் நன்மை உற்பத்தியாளர்கள் வர்த்தகர்கள் பாதிப்பு.

0
184

மலையகப் பகுதில் தற்போது மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவி;க்கின்றனர்.
மரக்கறி விலைச்சல் மலையகப்பகுதியில் அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்;
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் நுகவோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைந்துள்ளதாகவும் இதனால் வியாபாரம் குறைந்துள்ளதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினையடுத்து இம்முறை அதிகமானவர்கள் வீட்டுத்தோட்டங்களில் மரக்கறி உற்பத்தியினை மேற்கொண்டதன் காரணமாக இவ்வாறு மரக்கறி விலைச்சல் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும் பாலான உற்பத்தியாளர்கள் மரக்றிகளை வீதியோரத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்வதனால் மரக்கறி வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக்கர்கள் தெரிவித்தனர்.

இதே நேரம் உரம் மற்றம் மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவும் எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்தன் காரணமாகவும் உற்பத்தியாளர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்தனர்;எனவே அரசாங்கம் சகலரும் நன்மையடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டுகின்றனர்

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here