மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையை தடை செய்க – ஜனாதிபதிக்கு கடிதம்!

0
5

பாடசாலை செல்லும் மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்து இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை காணக் கூடியதாகவுள்ளது. இதனை கட்டுப்படத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் போதைப் பாவனை குறைவடைவதை காணக் கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவார் குறிப்பாக மாணவர் சமுதாயம் ஆகும்.

மேலும் இப்படி இருக்கும் பொழுது ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையும் காணக் கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தாங்கள் ஸ்ரீலங்காவை துப்பரவு செய்ய முன் வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் கையடக்க தொலைபேசியின் பாவனையை மாணவர்களிடையே துப்பரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம்.

அவையாவன :-

1.பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் தண்டிக்கப்படுகின்றார்களோ அதே போல் பாடசாலை செல்லும் மாணவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கையடக்க தொலைபேசி பொது இடங்களில் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் கையடக்க தொலைபேசி பாவிப்பதனை கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்.

3. பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும்.

கையடக்க தொலைபேசி பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும் இதற்கு காரணம் பெற்றோருக்கு தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே கையடக்க தொலைபேசி பாவனையை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here