அடைக்கலம் தேடி வரும் மக்களால் நிரம்பி வழியும் வீவ் நகரம்

0
125

மேற்கு யுக்ரேன் நகரமான வீவ், ரஷ்ய படையெடுப்பால் இடம் பெயர்ந்த அகதிகளுக்கு உதவுவதற்கான அதன் வரம்பை எட்டியுள்ளதாக அதன் மேயர் திங்கள் கிழமையன்று தெரிவித்தார்.படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் வீவ் நகருக்குள் வந்துள்ளனர். இது நகரத்தின் வளங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீவில் இப்போது சுமார் 200,000 பேர் தங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 பேர் ரயில் நிலையத்தின் வழியே கடந்து செல்வதாகவும் மேயர் ஆண்ட்ரி சடோவி கூறினார்.

“மற்றோர் அலை இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று கூறிய சடோவி, சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் நகரத்திற்கு வழங்கும் தங்கள் உதவியை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

திங்கள் கிழமை காலை, நகர சபை அதிகாரியான விக்டோரியா கிறிஸ்டென்கோ பிபிசியிடம், நகரத்தின் அனைத்து தற்காலிக தங்குமிட படுக்கைகளும் நிரம்பிவிட்டதாகவும் உள்ளூர் வணிகங்கள் தங்கள் கடை முகப்புகளையும் சேமிப்பு கிடங்குகளையும் திறந்து மக்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

வீவ் நகரத்தின் மத்திய நிலையம், யுக்ரேன் முழுவதிலும் உள்ள இடங்களை விட்டு வெளியேறும் மக்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாறியுள்ளது. குறிப்பாக கார்ஹிவ், மேரியோபோல், செர்னிஹிவ் மற்றும் தலைநகர் கீயவ் ஆகிய நகரங்கள் அதிக ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here