அமெரிக்காவினால் திட்டமிடப்பட்ட நாடகமா அறுகம்பை தாக்குதல் !

0
48

அறுகம்பை (Arugam Bay) பகுதியில் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றமையானது அமெரிக்காவின் (America) சோடிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட பொய்யான தகவல் என இலங்கையின் (Sri Lanka) அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் (M.M Nilamdeen) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய (Israel) மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பொய்யாக சோடிக்கப்பட்டு இலங்கை மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு விடயமாகவே அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தமை காணப்படுகின்றது.

அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படுமாக இருந்தால் அதை அமெரிக்கா மற்றும் மொசாட் (Mossad) இணைந்தே நடத்தும்.

இங்குள்ள மக்கள் யாரும் தாக்குதல் நடத்த போவதில்லை அத்தோடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலை நடத்திவிட்டு நம் மக்கள் மீது திருப்பி விடப்படுவதற்காக இவ்வாறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றது”என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here