அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி

0
83

நாளை மறுதினம் உதய நிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றன. இதனையடுத்து, முக ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார்.

இவரது தலைமையிலான அமைச்சரவையில்,துரைமுருகன், அன்பில் மகேஷ், பிடிடி ஆர், சங்கரபாணி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஆனால், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதய நிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே ஏற்பட்ட நிலையில், விரைவில் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில், நாளை மறுநாள்( டிசம்பர் 14 ஆம் திகதி), கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உதய நிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் இளைஞர் நலன் திட்ட செயலாக்கத்துறை அவருக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து ஆளுநரின் ஆர்.என்.ரவியின் அலுவலகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here