அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு

0
105

அரசியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அரசியலை விட்டு இலகுவில் விலகப் போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் (16) முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3.14% வீதத்துடன் 350,429 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியல் ஆசனத்துடன் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தேசியப்பட்டியல் தொகுதிக்கான நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

ஏனைய இரண்டு ஆசனங்களுக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டி.வி.சானக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சானக மதுகொட காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here