அவளுடன் நானும் இறந்துவிட்டேன்; மகளின் மரணம் குறித்து விஜய் ஆண்டனியின் உருக்கமான அறிக்கை

0
42

அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். ”அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” என்று மகளின் மரணம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் உருக்கமான தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19ம் திகதி அதிகாலை உயிரிழந்தார்.

மீராவின் உடலானது டி.டி.கே சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நடிகர் விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “என் மகள் மீரா அன்பானவள், மற்றும் தைரியமானவள்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “அவள் தற்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி,மதம், பணம், பொறாமை, வலி, வறுமை,வன்மம் இல்லாத இடத்திற்கு சென்றுவிட்டாள்.

என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கின்றாள்.

அவளுடன் நானும் இறந்துவிட்டேன், நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன், அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்” என உருக்கமாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Vijay Antony Statement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here