கொரோனா தொற்று பரவலின் மத்தியில் பஸ்களில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எரிபொருள் விலை ஒப்பிடும் போது பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் ஆசன எண்ணிக்கையை விட அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.