தண்டவாளத்தில் விழுந்த விமானம்; வேகமாக வந்த ரயில்! – விமானியை காப்பாற்றிய மக்கள்!

அமெரிக்காவில் தண்டவாளத்தில் விழுந்த விமானத்திலிருந்து விமானியை மக்கள் நொடிப்பொழுதில் காப்பாற்றிய திக் திக் வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ஒரு நபர் பயணிக்கும் ஒற்றை எஞ்சின் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. பறக்க தொடங்கி சில நிமிடங்களே ஆன நிலையில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் அந்த பகுதியில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.

அந்த சமயம் அந்த தண்டவாளத்தில் அதிவேக ரயில் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இதை கண்ட பொதுமக்கள் விரைவாக செயல்பட்டு விமான இடிபாடுகளில் சிக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர். விமானியை மீட்ட சில விநாடிகளுக்குள் ரயில் மோதி விமானம் சுக்கு சுக்காக நொறுங்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.