இலங்கையின் அண்டை நாட்டில் 2வது நபருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி!

0
21

இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் இரண்டாவது நபருக்கும் குரங்கு காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கு காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலும் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்து துறை தெரிவித்துள்ளது.26 வயதான குறித்த இளைஞனின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குரங்கு காய்ச்சல் பாதிப்பை தடுப்பதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here