இலங்கையில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நாய்!

0
47

அரசாங்க நிறுவனங்களில் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் விஞ்ஞான ரீதியான தீர்வாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்
விரைவு பஸ் டிக்கெட்டுகளை விரைவில் வழங்குவதற்கு QR முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கிராமிய வீதிகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தங்காலை, அம்பலாந்தோட்டை மற்றும் கதிர்காமம் டிப்போக்களுக்கு புதிய பஸ்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் 500 புதிய பஸ்களை சேவையில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் 115 மில்லியன் பெறுமதியான 10 பஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களில் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் விஞ்ஞான ரீதியான தீர்வாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து துறை அமைச்சராக தாம் பதவியேற்கும் போது, ​​பல அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் என்பன இழுபறி நிலையில் இருந்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

மேலும், பெரும்பாலான டிப்போக்கள் இலாபம் ஈட்டவில்லை எனவும், பஸ்களை திருத்துவதற்கு தேவையான உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் சுமார் எண்ணாயிரம் பஸ்கள் டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெரும்பாலான டிப்போக்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதிய வருமானம் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊழியர்களில் மிகச் சிறிய பகுதியினர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதே இதற்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈட்டும் வருமானம் முழுவதையும் நிறுவனம் முறையாகப் பெற்றுக் கொண்டால் எந்த ஒரு டிப்போவும் நஷ்டத்தை சந்திக்காது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

“அரசு நிறுவனங்களில் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அறிவியல் பூர்வமான தீர்வாகும்.

அந்த நோக்கத்திற்காக, லங்காமா பஸ் டிக்கெட்டுகளை விரைவில் வழங்குவதற்கான QR முறையை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். அடுத்த இரண்டு மாதங்களில், இலங்கையில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துத் துறைகளும் QR முறையைப் பயன்படுத்தி டிக்கெட் வழங்கும் நிறுவனங்களாக மாற்றப்படும். அப்போதுதான் ஒவ்வொரு டிப்போவும் இலாபம் ஈட்ட முடியும்” என்றார்.திருகோணமலையில் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்த தனது எஜமானரின் உடலை வேறு எவருக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்காத நாய் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் மஹாந்தரவெவ தல்கஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மஹாந்தரவெவ பாடசாலைக்கு அருகில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய A.H.M சமந்த அபேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது நண்பர்கள் இருவருடன் வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே காட்டுயானை ஒன்று வந்துள்ளது.

நண்பர்களில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டுள்ளார். மற்றைய நண்பர் புதரில் ஒழிந்து கொண்டுள்ளார்.3 பிள்ளைகளின் தந்தையும் நாயும் தனியாக இருந்ததால் நாய் தனது எஜமானரைக் காப்பாற்ற குறைத்துக்கொண்டு பலமுறை யானையை நோக்கி முன்னோக்கி பாய்ந்துள்ளது.

நாயைத் தாக்க முயன்ற காட்டுயானை குறித்த குடும்பஸ்தரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், அவரது சடலத்தை எடுக்க நாய் யாரையும் அனுமதிக்காது காவல் காத்துள்ளது.இறுதியாக நெருங்கிய உறவினர்கள் வந்த பின்னரே, சடலத்தை எடுத்துச் செல்ல நாய் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here