ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்பட இருக்கின்றது.
பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என்பன இதன் கீழ் தடை செய்யப்படவுள்ளன.
இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் (Single Use) ) ப்ளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுப்பொருட்களை கட்டுப்படுத்துதல்
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் (Single Use) ) ப்ளாஸ்ரிக் பொலித்தீன் 07 உற்பத்திகளை இறக்குமதி செய்தல், நாட்டில் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 2021.08.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அதற்கமைய குறித்த யோசனை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளுடனான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு, கீழ்க்காணும் ப்ளாஸ்ரிக் உற்பத்திகளை இறக்குமதி செய்தல், நாட்டில் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துதல் 2023.06.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• ஒருமுறை மாத்திரம் பயன்படுத்துகின்ற பானம் அருந்தும் ப்ளாஸ்ரிக் ஸ்ட்ரோ மற்றும் கலக்கும் உபகரணங்கள்
• ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்படும் யோகட் கரண்டி உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி அகற்றப்படும் பீங்கான், கோப்பை (யோகட் கப் தவிர்ந்த), கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள்
• ப்ளாஸ்ரிக் மாலைகள்
• ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகள்
(அரசாங்க தகவல் திணைக்களம்)