இவ்வருட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு

0
55

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்திற்கு அமைய 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை இவ்வருடம் செப்டம்பர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மே 27 முதல் ஜூன் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அறிவிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here