உக்ரைனில் வினியோக மையமாக விளங்கி வருகிற மேற்கு லிவிவ் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் புரூக்ளின் நகரில் உள்ள ‘பார்’ ஒன்றில் உக்ரைன்வாசி ஒருவர், ரஷியர் எனக் கருதி தனது நாட்டினர் ஒருவரை முகத்திலும், கழுத்திலும் பீர் பாட்டிலால் குத்தி அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
செவரோடொனெட்ஸ்க் நகரில் 80 சதவீத பகுதி ரஷ்யா கைகளுக்கு போய்விட்டது.
அந்த நகரின் பாதுகாப்பு கோட்டை தகர்க்க எல்லா திசைகளில் இருந்தும் ரஷ்ய துருப்புகள் தாக்குதல் நடத்துகின்றனர்.