”உங்க ஏவுகணை எங்க நாட்டை தாக்கிடுச்சு” – இந்தியா மீது பாகிஸ்தான் பரபரப்பு புகார்!

0
100

இந்தியா சோதித்த சூப்பர் சோனிக் ஏவுகணை தங்கள் எல்லைக்குள் வந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் அவ்வபோது எல்லையில் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவது தொடர்பான பிரச்சினைகளும் எழுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், ஹரியானா மாநிலம் சிறுசா நகரில் இந்தியா சோதனை செய்த சூப்பர்சோனிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்து தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இதனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து இந்தியா விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து இந்திய தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here