உடனடியாக நிறுத்தப்படும் அரிசி இறக்குமதி!!

0
112

இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு பாரிய ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அரிசி வியாபாரிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் வரை நாட்டில் போதியளவு அரிசி உள்ளதாகவும் அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 50,000,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருட இறுதி வரை அரிசி இறக்குமதி தொடர்ந்தால் அரிசியின் அளவு 50 இலட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன்னை தாண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் உட்பட வர்த்தகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here