உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவு!

0
114

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது.

இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த இந்த யோசனையை சமர்ப்பிக்கவுள்ளார்.

போக்குவரத்து செலவுகள் காரணமாக இம்முறை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு ஆசிரியர்கள் நாட்டம் காட்டுவது குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே நாளாந்த கொடுப்பனவை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இம்முறை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பம் செய்த ஆசிரியர்களின் எண்ணிக்கையானது மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஓர் பங்கினர் மட்டுமே எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 22ம் திகதி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதேவேளை, வரிக்கொள்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அவ்வாறு விலகிக் கொண்டால் விடைத்தாள் மதிப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒன்றியத்திற்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் நாளை சந்திப்பு நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here