உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட செய்தி வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு

0
49

இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் தமது பெறுபேறு தெரிந்துகொள்ள ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் .

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை 2023 இன் முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பெரும்பாலும் இந்த வார இறுதியில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

உயர்தர பரீட்சை 2023 இல் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் .

இதன்படி, மொத்தமாக 346,976 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here