உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாளை கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் ஒன்றுக்கூட உள்ளனர்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இ.தொ.கா தேர்தலுக்கான உத்திகள், கூட்டணியை அமைத்தல் மற்றும் ஏனைய பொறிமுறைகளை வகுப்பதற்காக இ.தொ.கா இந்த விசேட கலந்தாய்வை நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட வாரியான உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுகின்றனர்.
மேலும் ஜனவரி 1 முதல் 10ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலத்திற்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு இ.தொ.கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.