ஊழியர் சேமலாப நிதியம் பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

0
137

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான செயற்பாடுகள் புதிய நடைமுறையின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பை வெளியிட்ட தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அடுத்த மாதம் முதல் ஊழியர் சேமலாப நிதியம் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கமான 1958 க்கு அழைக்கலாம் அல்லது முன்கூட்டியே முன்பதிவு செய்ய appointment.labourdept.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணிகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் சிறந்த சேவை அனுபவத்தை வழங்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொழிலாளர் திணைக்களத்தின் சேவைகளை அதிகரிப்பதும் இதன் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here