எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஆறுமுகன் தொண்டமானை இணைத்து கொள்வது அவருக்கு இருக்கும் மக்களின் சக்தியே காரணம் அதுதான் இ.தொ.கா.வின் பலம். என்கிறார் மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன்.
ஹட்டன் டிக்கோயா தோட்டத்திற்கு செல்லும் வீதிக்கு 20 லட்சம் ருபா செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்
இந் நிகழ்வில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண இந்த கலாசார தோட்டஉட்டகட்டமைப்பு, தமிழ் கல்வி அமைச்சர், மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேல். மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் இலங்கை தொழிலாளர் காங்ரசை பொறுத்தவரையில் ஆறுமாதத்திற்கு ஒருமுறையும் தேர்தல் காலங்களிள் மாத்திரம் வந்து போகும் தொழிங்சங்கம் அல்ல சமுகத்திற் எந்தந்த சந்தர்பங்களில் அபிவிருத்தி திட்டங்கள் தேவைபடுகிறதோ அவைகள் அனைத்தையும் ஆறுமகன் தொண்டமான் ஊடாக ஏற்படுத்தி கொடுக்கபட்டிருக்கிறது.
ஆறுமுகன் தொண்மானை பொறுத்தவரையில் எதை செய்து தரமுடியுமோ அதனை மாத்திரம் செயது வருகிறார் ஆனால் சிலர் கூறுவார்கள் இந்த தோட்டத்திற்கான வீதி செப்பனிடபடுமா என்ற கேள்வியும் ஒரு சிலரால் எழுப்பட்டிருந்தது கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிக்கோயா தோட்டமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த வீதி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அடிக்கல் நாட்டபட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ராமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை தொழிலாளர் காங்ரசை பலபடுத்த வேண்டுமெனவும் அமைச்சர் ராமேஸ்வரன் கேட்டு கொண்டார்.
பொகவந்தலாவ நிருபர்
எஸ்.சதிஸ்