எரிபொருள் இன்மையால் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி ..!

எரிபொருள் இன்மையால் தேயிலை ஏற்றுமதி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களினால் பறிக்கப்படும் கொழுந்துகளை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின் விநியோகத் தடை நேரங்களில் தொழிற்சாலைகளை இயற்குவதற்கு எரிபொருள் இன்மையால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மேலும் தேயிலையை பொதி செய்வதற்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதோடு, பொதி செய்யப்பட்ட தேயிலையை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கும் சிக்கல்களை எதிர்நோக்குவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.