எரிபொருள் பிரச்சனையால் நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி ஸ்தம்பிதம்.

எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக மரக்கறி ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரிவிக்கையில் மறக்கரிகளை நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.இந்நிலையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையும் தட்டுபாடும் நிலவுவதால் வெளிபகுதிகளுக்கு மரக்கறிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதுமாத்திரமின்றி விவசாய தோட்டங்களில் இருந்து பெறப்படும் மரக்கறிகள் கொண்டு செல்ல முடியாமல் வாகனங்களிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலை தொடருமானால் மரக்கறிகள் பாழுதடைந்து விடும் அதேபோல விவாசாயமும் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளின் நிலையும் மிக பாதிப்புக்கு உள்ளாகுமென நுவரெலியா விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.எனவே விவசாயத்தை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் உள்வாங்கி எரிபொருளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் இல்லையேல் நாட்டில் விவசாயம் பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்படுமென நுவரெலியா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நீலமேகம் பிரசாந்த்