வென்னப்புவ பிரதேசத்தில் இஸ்ரேலிய பெண்கள் மூவர் தங்கியிருந்த விடுதி ஒன்றிற்கு அருகாமையில் உள்ள கடற்கரைக்கு , வேனில் வந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களும் காரணமின்றி பல மணி நேரம் கடற்கரையிலேயே காத்திருந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வியாழக்கிழமை (24) அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 18, 20 மற்றும் 27 வயதுடையவர்களாவர்.
மேலும் இவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.